பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்ப்படகு ஆழம் அறியமுடியாதது கடல்: பேராபத்துக் களே விளைவிக்கும் இடம். கடற்பிரயாணம் செய்யும் போது தப்பி விழுந்தவர்கள் தப்புதல் அரிது. ந்ேதத் தெரிந்தாலும் எ வ் வள வு தூரம்தான் நீந்திச்செல்ல முடியும் பெரிய பெரிய அலைகள் எழும்போது கடலில் ந்ேதமுடியுமா? கால் அயரும்போது ஏதாவது மிதக்கும் பொருள் ஒன்று கிடைத்தால் அதைப்பற்றிக் கொண்டாவது சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். அவ்விதப் பற்றுக்கோடு ஒன்று ம் இல்லாவிட்டால் கடலில் விழுந்தவரது தொல்லேயைச் சொல்லமுடியாது. சாதாரணமாகக் காற்றில்லாதபோதே கடலில் பெரிய அலேகளுக்குக் குறைவில்லை. பெரிய புயற்காற்று வீசும்போது அலைகளுக்குச் சொல்லவேண்டுமா? புயற் காற்றில் கடற் பிரயாணம் செய்யும்போது க ப் ப ல் ஏதாவது பாறையில் மோதி உடைந்துவிட்டால், அதில் பிரயாணம் செய்பவர்களின் நிலையை வார்த்தைகளால் எடுத்துக்காட்ட முடியுமா? உடைந்த மரத்துண்டுகளைப் பற்றிக்கொண்டு ஒருவர் இருவர் தங்பித்துக்கொள்ள முயற்சித்தாலும், கடலில் வாழும் சுரு, திமிங்கலம் போன்ற பெரிய மீன்கள் சும்மா விடுமா? அப்படியே ஆளே விழுங்கும் பிரானிகள் அல்லவா அவைகள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/140&oldid=781571" இலிருந்து மீள்விக்கப்பட்டது