பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்ப்படகு 123 இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் மக்கள் உயிர் தப்ப உயிர்க்கச்சைகள் (Life-belt) கப்பலில் வைக் கப்பட்டிருக்கும். மக்கள் அவற்றை இடுப்பில் மாட்டிக் கொண்டு மிதந்துகொண்டிருப்பார்கள்; சில உயிர்ப் படகுகளையும் கப்பலில் வைத்திருப்பதுண்டு, அவற்றி லும் சிலரை ஏற்றிக் கரைசேர்ப்பார்கள் மாலுமிகள். இவ் விபத்தை கம்பியில்லாத் தந்திமூலம் அறிந்து வேறு கப்பல் ஒன்று அங்குவந்து ஆபத்தில் சிக்கிய மக்களைக் காப்பாற்றுவதும் உண்டு. மாணிக்கவாசகர் போன்ற உள்ளொளி பெற்ற பெரியார்கள் பிறவியையே ஒரு பெருங் கடலாக உரு வகம் செய்திருக்கிருர்கள். உலகிலுள்ள கடலுக்குக் கரையிருக்கிறது; இப்பிறவிக் கடலுக்குக் கரையில்லே. ஆகவே, பிறவி பெருங்கடல்' எனக்குறிக்கப்படுகிறது. முன்னேப் பிறப்பு பின்னே வரும் பிறப்புக்குக் காரணமாகயிருக்கிறது; பின்னல் வரும் பிறப்பு முற் பிறப்பின் காரியமாக இருக்கிறது. இங்ங்ணம் பிறப்புக் கள் தொடர்ந்து வரும் என்று சித்தாந்த நூல்கள் கூறு கின்றன. உயிர் வீட்டு நிலை அடைகிற வரையிலும் பிறப்புக்கள் தொடர்ந்து வந்துக்கொண்டேயிருக்கும். ஆகவே, பிறப்பாகிய இக்கடலுக்குக் கரையில்லே என்று சொல்லலாம். பிற்ப்பாகிய கடல் அகலத்திலும் ஆழத் திலும் வளர்ந்துகொண்டே செல்லும் பிறவிக்கடலில் வீழ்ந்தவர்கள் தப்பித்துக் கரையேறுதல் அருமையா தலால், பிறவியைப் பெருங்கடல் என்று உருவகம் செய் துள்ளார்கள் பெரியோங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/141&oldid=781573" இலிருந்து மீள்விக்கப்பட்டது