பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 கவிஞன் உள்ளம் கிடைக்கிறது. அந்த ஏமப்புணையைத் தொட்டதும் காமச்சுருவின் ஆற்றல் குறைந்து விடுகிறது. இறைவன் கருணையால் தனக்கு உயிர்ப்படகுக் கிடைத்தாலும், அதனைச் செலுத்திக் கரையை அடைவ தற்கு வேண்டிய அறிவு, ஆற்றல் முதலியவை தனக்கு இல்லை என்பதை நெஞ்சு திறந்து தெரிவிக்கிருர், ஒரு அழகான பாடல் வாயிலாக. அம்பாடல் வருமாறு : " தனியனேன் பெரும்பிறவிப் பெளவத் தெவ்வத் தடத்திரையால் எற்றுண்டு பற்ருென் நின்றிக் கனியைதேர் துவர்வாயார் என்னுங் காலாற் கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட் டினியென்னே யுய்யுமா றென்றென் றெண்ணி அஞ்செழுத்தின் பு:ணபிடித்துக் கிடக்கின் றேனே முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லந் கரைகாட்டி யாட்கொண்டாய் மூர்க்க னேற்கே ’ - திருவாசகம் (திருச்சதகம், 27.) (பெளவம் - கடல்; எவ்வம் - துன்பம்; திரை - அலை; எற்றுiண்டு.அலேக்கப்பட்டு; கனியைைேர்துவர்வாயார் . கொவ்வைப்பழத்தை யொத்த சிவந்த வாயினேயுடைய மகளிர் காலால் - காற்ருல்; அஞ்செழுத்து - பஞ்சாட் சர மந்திரம், புணே - தெப்பம்; மல்லல் காை - முக்திக கரை.) பாட்டு இலக்கியச் சுவையை உணர்வார்க்கும் அணி கலம் காண்பார்க்கும் ஒரு சிற்ந்த விருந்தாக இருக்கிறது. உவமைகள் கண்ணுடியில் காண்பவை போலிருக்கின்றன. பாட்டை உரிய இசையில் பாடினல் உள்ளத்தில் தெய்வீக உணர்வு எழுவதை அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/144&oldid=781579" இலிருந்து மீள்விக்கப்பட்டது