பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கவிஞன் உள்ளம் அதே வேகாயில் தேன் எடுக்க ஒரு தேனிக் களின் கூட்டம் அப்பூங் கொத்துக்களில் மொய்த்துக் கொண்டிருந்தது. கடாவின் கலாட்டா வால் தேனிக் கூட்டம் ஞொய்' என்ற ஒலியுடன் குபிரெனப் பறந் தது: தேனிக்களின் ஒலி கடாவின் செவியில் புகுந்தது; அதற்குச் செவியுணவு கிடைத்தது. அதன் சுவையில் அப்படியே ஒன்றிப்போய் விட்டது. அதனைத் தவிர அதன் இன்பத்தை யாரறிவார் : பசியும் பற்ந்துவிட் டது. கெளவிய குவளேக் கொடிகளே மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சிலையுருவம்போல் நின்றது எருமைக்கடா. அது கின்ற காட்சியை கோக்கினுல் செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்' என்று வள்ளுவர் கூறியுள்ளதை எருமைக்கடாவும் தெரிந்துகொண்டதோ என்றுகூட கினேக்கவேண்டி யிருக்கிறது. புகழேந்தி ஒரு சமயம் இத்தகைய காட்சியைக் கண்டார். எருமையின் காட்சி அவர் மனத்தைக் கவர்ந்துவிட்டது. அழகு பொருந்திய குவளே மலர் களின் கர்ட்சியும் வெயிலில் அலைந்து திரிந்துவிட்டு வந்த எருமைக்கடா அதை ஆர்வத்துடன் கெளவி நின்ற மாட்சியும், இந்தக் கலாட்டா வால் உச்சநிலை யில் "ஞொய்” என்ற ஒலியுடன் குபிரென்க் கிளம்பிய வண்டுகளின் இசை ஒலியும் பாவலரின் கருத்தைக் கவர்ந்தன. இந்தச்கருத்தை அப்படியே ஒரு வெண் பாவில் வைத்துத் தீட்டிவிட்டார். அந்தக் காலத்தில் பெண்கள் தாமாகத்தான் காதலர்களைத் தேடிக்கொண்டனர். அதனுல்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/146&oldid=781585" இலிருந்து மீள்விக்கப்பட்டது