பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 கவிஞன் உள்ளம் எட்டும்படி செய்யவல்லன புராணங்கள் எனப்படும் பழங் கதைகள். புராணங்கள் பாமரமக்களுக்கென் எழுதப்பட்டனவாதலால் அவற்றுள் பல புனேந்துரை கள் மலிந்திருப்பது இயற்கை. மெய்ப்பொருளை மட்டிலும் இலக்காகக் கொண்டு புராணங்களைப் படித் தல் சாலப் பயன் தரும். காஞ்சி புராணத்தில் காட்டுப் படலத்திலும் ககரப்படலத்திலும் பல நயமான கற்பனேகள் உள. அவை படிப்போருக்குப் பேரின்பம் தரவல்லன. பெரிய சைவ சித்தாந்தக் கருத்துக்களும் சாதாரண பொருள் களைக்கொண்டு தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இக்கருத்துக்கள் கதைகள் மூலமாகவும் விளக்கப் பட்டிருக்கின்றன. ஒருகால் உமாதேவியார் சி வ பெ ரு மா னே வணங்கி, அவரை இகழ்ந்த தக்கனிடம் வளர்ந்து தாட்சாயணி என்று பெற்ற பெயரையும், வளர்ந்த உடலையும் விட்டுவிட வேண்டினர். அங்ங்ணமே சிவ பெருமானும் உமையைத் தன் மகளாக வளர்க்க வேண்டும் என்று கடுந்தவம் புரியும் பனிமலையரசன் பாவையாகச் செல்ல அருள் புரிந்தார். அங்ங்னமே உமையும் அம்மலேயரசன் காணும்படி ஒரு தாமரை மலரின்மீது குழந்தையாக விருக்க, மலேய்ரசன் அக் குழந்தையை எடுத்திச் சென்று வளர்த்து வரலான்ை. இங்ங்ணமிருக்க, சிவபெருமானர் திருக்கைலாய மலேவின் தென் சிகரத்தில் இருக்கும் கல்லால நிழலின் கீழ் தேன்முகக்கடவுள் வடிவினராய் எழுந்தருளியிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/150&oldid=781595" இலிருந்து மீள்விக்கப்பட்டது