பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செக்தமிழ்த் தீனி 133 பாடிக்கொண்டும் வருகிமூர்கள். புது வெள்ளித்தை எதிர்நோக்கி வரவே ற்கும் உழவர்களைப் போல ஒடி மக்களே இரு கையாலும் ஏந்தி, உச்சிமோந்து, முத்த டுேகிருள். பின்னர் முகத்தைக் கழுவிப் பொட்டிட்டு, வேற்றுடை அணிவித்து, சிற்றுண்டி அருத்தி, அவர் களைக் கடற்கரைக்கு அழைத்துச் செல்கிருள் காற்று வாங்க. பல காட்சிகளைக் கடற்கரையில் கண்டு களித் துக்கொண்டே காற்று வாங்குகிருர்கள். கையெழுத்து ம ைற கிற நேரம் ஆகிறது. வீடு திரும்புகிருர்கள். காள்தோறும் மாலை நேரத்தில் ஒரு பகுதி இம்மாகிரி யாகக் கழிகிறது. வீடு அடைந்ததும் விளக்கேற்றி விட்டிற்குள் கறும்புகை எழுப்புகின்ருள். விளக்கருகே குழந்தை க்னே உட்கார வைத்துப் படிக்கச் செய்கிருள். பிள்ளே களைப் படிக்கச் செய்வது பெரிய வேலை. விளக்கருகில் உட்காரவைத்தால் போதும் என்றிருக்கும். பிள்ளைகள் சுவடிகளே எடுத்துக்கொண்டு “ஆ,ை ஆவென்னு, ...... சானு, சாவென்னு” என்று பெரிய குரலுடன் படிக்கத் தொடங்குகின்றனர். இந்த இரைச்சல் இன்பத்தைப் பருகிக்கொண்டே இரவு உணவை அமைக்கிருள். 邕f@ 、ヴ குழந்தைகள் அரை வகுப்பில் (முதல் வகுப்புக் குக் கீழ் வகுப்பு) படிக்கின்றனர். எழுத்துக்களையே சரிவர அறியார். இவர்கள் எங்ங்னம் சொற்களையும். சொற்ருெடர்களையும் படிக்கப்போகிருர்கள்? எழுத் துக்களேயே தப்பும்தவ்றுமாக உளறிக்கொட்டுகிருக்கள். அது அவளுக்கு மழலைச்சொற்போல் இன்பம் தருகிறது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/157&oldid=781609" இலிருந்து மீள்விக்கப்பட்டது