பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழங்கயிறு. மலைச் சாரல்களில் அடிக்கடி யானேகளைக் கூட்டங்கூட்டமாகக் காணலாம். திருவாங்கூர் தனி அரசைச்சேர்ந்த எல்லைகளில் சுற்றினவர்களுக்கு இத் தகைய வாய்ப்புகள் நினைவுக்கு வரும். சிலசமயம் மதயானைகள் ஒன்ருேடொன்று போரிடும் காட்சிகளே பும் பார்க்கலாம். ஒரு அழகிய மலேச்சாரல் ஒரு நாள் இரண்டு மத யானைகள் ஒன்ருேடொன்று போரிட்டு கிற்கின்றன. முதலில் அவை ஒன்ருேடொன்று மோதிக்கொள்கின் றன; பிறகு அருகாமையில் உள்ள மரங்களேயொடித்து அவைகளை வீசிக்கொள்கின்றன. அவற்றின் அருகில் மொத்தமான கயிறு ஒன்று கிடக்கின்றது; எப்படியோ யானைகள் கயிற்றைத் தலைக்கு ஒரு நுனியாகப் பற்றிக் கொள்கின்றன. கயிற்றை இழுத்துப் போரிடுகின்றன. கயிருே தேய்ந்த பழ்ங்கயிறு: யானேகளின் இழுப்பில் கயிறு அறுந்துபோக வேண்டியது தான். யானைகள் ஒவ்வொரு த ட ைவ இழுக்கும் போதும் கயிற்றின் பிராணன் போய்க் கொண்டிருக் கின்றது; ஒவ்வொரு புரியாக அ று ந் து கொண் டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/24&oldid=781630" இலிருந்து மீள்விக்கப்பட்டது