பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கவிஞன் உள்ளம் மேகம் போன்ற கூந்தல் அழகுதான் என்ன ! முதுகுப்புறத்தில் தாழ்ந்திருக்கும் நீண்டு இருண்ட கூந் தல் அழகான கண்கள்; மையுண்டு மருண்டு பார்க்கும், உள்ளத்தைக் கொள்ளே கொள்ளும் கண்கள்! கண்விழி களுக்கேற்ற இமைகள்; காதல் போதையை உண்டாக்கு வதற்கு ஏற்ற வண்ணம் கொஞ்சம் திறந்திருக்கின்றன; மலரும் நிலையிலுள்ள ஒரு முகை போல சிறிது திறந் திருக்கின்றன. என்னே அவற்றின் பொலிவு! இவ் வாறு அவன் கினேத்த வண்ணம் நடந்து செல்கிருன். என்ன செய்வான் பாவம்? அவனைப் பிரிந்து தனியாக இருக்கிருன் நிலவு காயும் இரவில்; நடுக் கானகத்தில், அவளைப் பிரிந்த கிலேயில் பால் போல் ச்ொரிந்து கிற்கும் வெண்மதியின் தண்ணிலவை அவ குல் அனுபவிக்க முடிய வில்லே. " ஏன் தனியாகச்சென்று அவதிப்படுகிமுய் வரி போவோம் நமது துன்பத்தைத் தீர்த்துக்கொள்ள ' என அவனது உள்ளம் தாண்டுகிறது; கூட்டந்தான் உறுதிப் பொருள் எனக் கூறுகிறது அவனது உணர்வு ്. சற்று நேரம் மெய்ம்மறந்து காதல் உலகில் பிரயா ணம் செய்கிருன். தன்னே மறந்த நிலையில் இருப்பதால் அவனுக்கு ஒன்றுமே புலப்படவில்லே. சிறிது நேரத்தில் அவன் சுயநிலைக்கு வருகிருன்: கடமையை உணர்கிருன். சீ, என்ன மூடத்தனம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/26&oldid=781634" இலிருந்து மீள்விக்கப்பட்டது