பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர் அடங்கிற்று. 17 அவள்து ஊருக்கு அருகில் உள்ள கடற்கரை யில் புலிநகம் போன்ற பொன்னிறுமுள்ள கொன்றை மலர்கள் ஏராளமாக இருந்தன. அங்குள்ள புன்னே மரங்களிலும் ஏராளமான பூக்கள் பூத்திருந்தன. கொன்றைப் பூக்கள் தாமாக உதிர்ந்து கிடக்கும்; அவற்றின் மீது புன்னே மலர்களும் உதிர்ந்து ஒவியம் வரைந்தது போல மணல் தரையை அழகு படுத்தி விளங்கும். அங்ங்ணம் அழகாக இருந்தது அக் கடற்கரைச் சோலே. கடற்கரைக்கு அருகாமையில் உள்ள வயல் களில் நெய்தல் மலர்களுக்குக் குறைவில்லை. புன்னே மலர்களும் கொன்றை மலர்களும் கடற்கரை வெளி கனில் உதிர்ந்து கிடக்கும் காட்சி வயலிலுள்ள கெய்தல் மலர்களேக் கடலினுள் போகாதவாறு தடுப்பதற்கு அனேபோட்டதுபோல் இருந்தது. திருவிழாக்காலங்களிலும், ஏனைய விசேஷ காட் களிலும் ஊரிலுள்ள இளமங்கையர் நெய்தல் மலர் களேக் கொய்துத் தங்களது தழை ஆடையை அழகு படுத்துவதற்காக அந்த இடங்களுக்கு வருவதுண்டு. ம்லர்களைப் பறித்துக்கொண்டு அக்கடற்கரைப் பக்கங் களிலுள்ள சோலையில் விளையாடிச் சிறிது நேரத்தை அங்குப் போக்குவார்கள். ஒரு நாள் அவள் அச்சோலைக்கு வந்தாள்; அன்று அதிக நேரம் தங்கி விளையாடிக் கொண்டிருந் தாள். தோழிகள் எல்லோரும் விளையாடிக்கொண்டிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/35&oldid=781655" இலிருந்து மீள்விக்கப்பட்டது