பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2-A 鸭 e to 酵 斡 அபாய ஆாபபாடடம r م அது பாண்டி காடு நெடுஞ்செழியுன் ஆட்சி புரிந்த காலம். நெடுஞ்செழியன் சிறியவனுக இருக் கும்போது அவன் தங்தை அவனைக் கைவிட்டு விண்ணுடு சென்று விட்டான். ஆதலால் நெடுஞ் செழியன் இளமையிலேயே அரசுகட்டில் ஏறுதல் இன்றியமையாததாயிற்று. இவன் ஆட்சி புரிந்து வரும் நாளில், சிறு பயல்தானே, இவனே எளிதில் வென்று விடலாம்' என்று கினைத்து இராசசூயம் வேட்ட பெருகற்கிள்ளி என்ற சோழ அரசனும், சேர மான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறை என்ற சேர அரசனும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருகன் என்ற வேளிர்கள் ஐவரும் பாண்டி காட்டை முற்றுகையிட்டார்கள். யானைகளால் சூழப்பட்ட ஆண் சிங்கம் போல் மிகக் கோபத்துடன் கிளம்பினுன் கெடுஞ்செழியன் , உழிஞைப் பூமாலையை அணிந்து சென்ருன். மிகவும் சிறியவனுக இருந்தாலும் சிறிதும் அஞ்சாமல் கடும் போர் புரிந்து அந்த ஏழரசர்களேயும் புறங்காட்டி ஒடச் செய்தான். ஏழரசர்களும் ஒடிச்சென்று சோழ நாட் டில் புகுந்தார்கள். ஆனல் நெடுஞ்செழியன் அவர்களே அத்துடன் விட்டானில்லை; அவர்கள விடாது பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/42&oldid=781669" இலிருந்து மீள்விக்கப்பட்டது