பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய ஆர்ப்பாட்டம் 25 ெ தாடர்ந்து, அவர்களேத் தலையாலங்கானம் என்ற இடத்தில் மறித்துக்தொண்டு மீண்டும் ஒரு பெரும் போர் நடத்தி அதிலும் வெற்றி பெற்ருன். அத் துடனும் கில்லாது பகைவர்களே அவர்கள் தலைநகர் வரை போர்ப்பறை யொலிப்பத் துரத்திச் சென்று அவர்கள் உரிமை மகளிர் காணமுற் ந் உயிர்துறக்கு மாறு அவர்களைக் கொன்ருன். அதுமுதல் அவனுக்கு தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று பெயர் வழங்கி வரலாயிற்று. ଜ୍ଯା z வெற்றியில் களித்த போர்வீரர்கள் கொண்ட மகிழ்ச்சியை அளவிட முடியாது. போர் கடக்குங்கால் அவர்கள் செய்த ஆரவாரத்தைக் காட்டிலும் வெற்றி யடைந்த களிப்பினுல் செய்த ஆரவாரந்தான் அதிகமாக இருந்தது. பாண்டி காட்டிலுள்ள ஒவ்வொருவரும் இந்தப் போரின் முழு விவரங்களேயும் அறிந்திருந்தனர்: மிக இளையவனுக இருந்தாலும், இரண்டு பேரரசர்களை யும் ஐந்து வேளிர் மன்னர்களேயும் ஒருங்கே தாக்கி வெற்றியடைந்தது ஆச்சரியப்படத்தக்கதல்லவா? ஒவ் வொரு ஊரிலும் உள்ள பெண்டிர்களும் சிறுவர்களும் கூட போரின் வரலாற்றை நன்கு அறிந்திருந்தனர். பாண்டி காட்டில் கால்வகை நிலங்களும் வுளம் பெற்றிருந்தன. மருத கிலத்தைச் சார்ந்த ஒரூரில் படைத்தலைவன் ஒருவன் இருந்தான் தலையாலங் கானத்தில் நடைபெற்ற போரில் பெரும் பங்கு கொண் டவன். அவன் சமீபத்தில் நடைபெற்ற் போரைப் பற்றி அடிக்கடித் தன் மனேவியிடம் சொல்வதுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/43&oldid=781671" இலிருந்து மீள்விக்கப்பட்டது