பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணம் செய்துகொள் அவன் மலைநாட்டைச் சேர்ந்தவன் : வாலிபன். ஒரு நாள் அவன் மலே நாட்டில் வசிக்கும் குன்றவாணர் மகள் ஒருத்தியைக் கண்டான். ஊழ்வினே காரணமாக அவர்களிடம் காதல் அரும்பி மலர்ந்தது. காதலின் விளைவாகிய களவொழுக்கம் சில நாட்கள் நடை பெற்றது. எவ்வளவு நாட்கள்தாம் இவ்வாறு களவு நிகழ முடியும் அதுவும் காதல் சம்பந்தமான விஷயங்களை நீண்ட நாட்கள் மறைத்து வைக்க முடியுமா? எப்படியோ இரகசியம் வெளிப்பட்டு விட்டது: அக்கம்பக்கத்திலுள்ள ஒருவர் இருவர் இதைப்பற்றி ஒருவர் காதை ஒருவர் மெதுவாகக் கடிக்க ஆரம்பித் தனர். பிறகு ஊரிலுள்ள பலருக்கும் தெரிந்து, எங்கு பார்த்தாலும் இதைப்பற்றி ஒரே பேச்சாக இருந்தது. இதை அவளது தாய் தந்தையர் அறிந்தனர். என்ன செய்வதெனத் தெரியவில்லை. ஊர்வாயை அவர் களால் மூட முடியுமா? 'கடந்தது கடந்து போய் விட்டது. இனிமேல் எப்படியாவது கடக்காது தவிர்த் தால் போதும்” என்ற முடிவுக்கு வந்தனர் அவளது பெற்றேர்கள். அவளது தாய் தந்தையர் அவள்மீது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/48&oldid=781683" இலிருந்து மீள்விக்கப்பட்டது