பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணம் செய்துகொள் 33 வந்தாள். எங்கு சென்ருலும், தோழி . அவளுடன் செல்வது வழக்கம். அவர்கள் வாழ்ந்து வந்த இடம் மலைப்பாங்கா னது. எங்கு பார்த்தாலும் தினேப்புனமாக இருக்கும். அழகிய மடமங்கையர் அதைக் காவல் புரிந்து வருவார் கள், கிளி முதலிய பறவைகள் கதிர்கள அழிக்காவண் ணம். எப்பக்கம் பார்த்தாலும், அவர்களது கிளிகளே ஒச்சும் சத்தம் கேட்டவண்ணமாக இருக்கும். அச் சத்தம் கிளிகளின் சத்தத்தைப் போலவே இருக்கும். கிளிகளும் தம் இனத்துப் பறவைகளின் ஒலிகள் தாம் அவைகள் என எண்ணி புனங்களைவிட்டு வெளியேரு. இந்த ஒலிகளினல் கிளிகளின் கூட்டம் அதிகமாதலும் உண்டு. தினேப்புனத்தின் ஒரங்களிலுள்ள மரங்களில் கிளிகள் எப்போதும் கூட்டங்கூட்டமாகவே இருக்கும். மரக்கிளைகளில் அணிப்பிள்ளைகள் ஓடி விளையாடி சத்த மிட்டுக் கொண்டிருக்கும். அங்கு பலாமரங்கள் அதிகம். பழம் பழுக்கும் பருவத்தில் குறவர்கள் அங்கு சிறு குடிசைகளை அமைத்துக் கொண்டு காவல் காப்பது வழக்கம். தினக் கதிர் முற்றும் காலத்தில்தான் வேங்கை மரமும் பூக்கும். வேங்கைப் பூக்கள் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இப்பூக்கள் குடிசைகளின் மீது உதிர்ந்து கிடப்பதால், குடிசைகள் பூக்களால் வேயப்பட்டவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/51&oldid=781692" இலிருந்து மீள்விக்கப்பட்டது