பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்யாணம் செய்துகொள் 35 " நாங்கள் இருவரும் இணே பிரியாது இருந்து பழகியவர்கள். அவளை விட்டுப் பிரிய எனக்கு ம்னம் வருவதில்லை. பிரிய நேர்ந்தால் அவளது பெற்றேர் என்னே அதையும் இதையும் கேட்டு உயிர் வாங்குகிருர் கள். ஆகவே அவளேத் தனியாக அனுப்ப என் மனம் கூசுகிறது.” 'பகலில்தானே இத்தொந்தரவுகள் எல்லாம்? இனிமேல் இரவில் வரட்டுமா?” “ அதுவும் முடியாது. அவள் பயந்த சுபாவ முடையவள். நீ இரவில் வந்தால், வழியில் உனக்கு என்னென்ன ஆபத்துக்கள் வருமோ என ஏங்கி உள் ளம் கலங்குவாள். அவற்றை கினேத்தாலும், அவள் உயிர் வாழ்வது கடினம்.” பின் என்ன செய்யவேண்டும்?” ' செய்வது என்ன இருக்கிறது? இனிமேல் இக் களவு ஒழுக்கம் முடியாது. வேறு வழியைத்தான் கண்டுபிடிக்க வேண்டும். ' வேறு வழிதான் என்ன?” ‘ எங்கள் ஊரில் குறவர்கள் குடிசைகள் இருக் கின்றன. வேங்கைப்பூக்கள் அவற்றின்மீது உதிர்ந்து, குடிசைகளையே மூடிவிடும்; குடிசைகள் பூக்களால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/53&oldid=781696" இலிருந்து மீள்விக்கப்பட்டது