பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கவிஞன் உள்ளம் வேயப்பட்டவைபோல் இருக்கும். அக்கம்பக்கமாக வரும் யானை அத்தகைய ஒரு குடிசையைப் புலி என்று நினைத்துக்கொண்டு அதன் அருகேவருவதற்கும் அஞ்சும். அப்படி யிருக்கிறது உன் கதை.” " என்ன சொல்லுகிருய்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே." ' கினைத்துப் பார்த்தால் தெரிகிறது ” ' நினைத்துதான் பார்க்கிறேன். ஒன்றும் தெரியவில்லையே." " அவளது பெற்ருேர்களைக்கண்டு நீ ஏன் பயப் படவேண்டும்? வெருவத்தகாத அவர்களைக் கண்டு நீ வெருவ வேண்டிய அவசியம் இல்லையே” ' கண்டால் சும்மா விடுவார்களா?' 'யார்தான் சும்மா விடுவார்கள்? அவர்களுக்குத் தெரிகிறபடி நீ அவளுடன் பழகவேண்டும். அதற்கு ஏற்ற முறையைக் கைப்பற்றவேண்டும். இப்போதா வத் த்ெரிகிறதா?” " நீ அவளேக் கல்யாணம் பண்ணிக்கொள் என்கிருயா?” " ஆம் அதுவேதான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/54&oldid=781698" இலிருந்து மீள்விக்கப்பட்டது