பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயமான பேச்சு அவளுக்கு மணப்பருவம் வந்துவிட்டது. ஆனல் திருமணம் இன்னும் ஆகவில்லை. தோழியர்களுடன் சோலேக்குச் சென்று பூக்கொய்தும் புனலாடியும், ஆடி யும் பாடியும் பொழுது போக்கி வந்தாள். அவன் கட்டழகு மிக்க காளே போன்றவன். அவனுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. தோழர் களுடன் காட்டிற்கு வேட்டையாடச் செல்வான்; அங்குப் பல காட்சிகளைக் கண்டு மகிழ்ச்சியுடன் கால்ங் கழிப்பது வழக்கம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஏற்றவர்களே. ஊழ்வினை காரணமாக ஒருபோது அவர்கள் சோலையில் சந்திக்க நேர்ந்தது. அவள் தனிமையாக வந்தபோது யானே ஒன்றைக் கண்டு பயந்து கூவிள்ை. அப்பக்க மாக வர கேர்ந்த ,அவன் அவ்விடத்திற்கு வந்து யானையை விரட்டி அவளுக்கு ஆறுதல் கூறி ஆற்றிப் பேர்னன். அன்று முதல் இருவருக்கும் காதல் உண்டாகி, முற்றிப் பழுத்து விட்டது. அவளுடைய பெற்ருேர்கள் அவளைத் தினப் புனத்திற்குக் காவுலுக்கு அனுப்புவதுண்டு. இந்தக் காலங்களிலெல்லாம் அவன் அவளைத் தினேப்புனத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/56&oldid=781702" இலிருந்து மீள்விக்கப்பட்டது