பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. கவிஞன் உள்ளம் அவற்றில் தொங்கும். கனிகள் வெடித்துத் தேனச் சொட்டிக்கொண்டிருக்கும். உண்பவர்களுக்கு குறுஞ் சுவை பயக்கும் பலாப்பழங்கள் மிகுதியாக இருக்கும். அவ்வருக்கைப் பலாச்சுளையிலிருந்தும் தேன் வடிந்து கொண்டிருக்கும். இந்த இரண்டு வகைத்தேனும் கற்பாறைகளிலுள்ள குழிகளில் தேங்கியிருக்கும். சில நேரம் மந்திகள் விடாய் மிகுதியால் இத்தேனே நீர் என்று நினைத்து அளவுக்குமீறிப் பருகிவிடும். இம் மதுவின் போதை யால் மிளகுக்கொடி படர்ந்துள்ள சந்தன மரத்தில் ஏறமுடியாது மயங்கி அம்மரத்தின்கீழ் நல்ல பூக்களாலாகிய படுக்கையில் அயர்ந்து தூங்கும். இங்ங்ணம் பல்வேறு விலங்குகளும் கின் நாட்டில் எதிர் பாராத இன்பத்தை அடையும். அத்தகைய நாட்டின் தலைவனே !' என்று பேச்சைத் தொடங்குகிருள். 'ஆண் குரங்கு அறியாது தேனே அருந்தி அதனே உண்ட மயக்கத்தால், தன் தொழிலாகிய மர மேறுதலைச் செய்ய முடியாமலும், வேறிடங்களுக் குச் செல்லமுடியாமலும் அருகேயுள்ள சந்தன மரத் தின் நிழலில் பூமேல் உறங்குவதுபோலவே, யுேம் தலைவியின்பால் களவொழுக்கமாகிய இன்பத்தை அனுபவித்து, கினது தொழிலாகிய அறவழியை மறந் தும், இக்களவை நீக்கி உலகோர் அறியத்திருமணம் புரிந்து கொள்ளாமலும், மயங்கி நிற்கின்ருயே' என்று குத்திக்காட்டுவது போன்ற தோழியின் நயமான பேச்சு இன்பந்தருகிறது. இத்துடன்.அவள் பேச்சை நிறுத்திவிடவில்லை. மேலும் பேசுகிருள்; "நீ எதிர்பாராமலே உனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/58&oldid=781706" இலிருந்து மீள்விக்கப்பட்டது