பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணில் ஊமன் 49 கொண்டாவது மிதந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம். ஊமையா யிருப்பவர்களுக்குப் பொதுவாகக் காது கேட்காது; ஆகவே அவர்கள் பிறர் பேசுவதைக் கேட்க முடியாது. தங்களாலும் பேசுதல் முடியாது. இவ்வூமையர்கள் படும் துன்பத்தை அளவிட்டுக்கூ ற முடியாது. வாயும் காதும் இல்லாது போயினும் போகட்டும் கண்ணுவது இருந்தால், பிறர் கருத்துக் களே அவர்களது சைகைகளிலைாவது தெரிந்து கொள்ளலாம்., தாங்களும் அவ்வாறே தங்கள் கருத் துக்களைப் பிறருக்குத் தெரிவிக்கலாம். ஆனல் வாயும் காதும் இல்லாத ஊமையர்கள் கண்ணையும் இழந்அது விட்டால், அவர்கள் இவ்வுலகில் படுந்துன்பத்தைச் சொல்லவும் முடியாது. இத்தகைய ஊமையர்கள் பிறருடைய உதவிகளைக் கொண்டேதான் தமது வாழ் நாளைக் கழிக்கவேண்டிவரும். நமது ஊமையன் சென்ற கப்பல் பகற்காலத்தில் கவிழ்ந்திருந்தாலும், உயிர் தப்புதல் அரிது. அருகில் ஏதாவது மரத்துண்டு மிதந்தாலும் அவனுக்குத் தெரி யாது. சேய்மையிலிருந்து யாராவது கூவிலுைம், அதைக் கேட்கவும் முடியாது. அவனுலும் சேய்மையி லிருப்பவர்களைக் கூவியழைத்தல் முடியாத் காரியம் பக்கத்திலோ சேய்மையிலோ இருப்பவர்கள் அவன் கிலேயினே அறிந்தால், ஒருகால் படகுடன் வந்து காப்பாற்றிலுைம் காப்பாற்றலாம். ஆனல் கப்பல் கவிழ்ந்தது இரவில். ஆகவே, ஒருவரும் வந்து அவனேக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/67&oldid=781727" இலிருந்து மீள்விக்கப்பட்டது