பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்வன் மகன் அது ஒரு சிறிய ஊர். ஒரு திண்ணேப் பள்ளிக் கூடம். அதைத் தவிர அங்கு வேறு பள்ளிக்கூடம் இல்லே. அவ்வூரிலுள்ள ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் அந்தத் திண்ணப் பள்ளிக்கூடத்தில் தான் படித்து வந்தனர். எல்லோரும் சிறிய பிள்ளே கள். ஆகவே, ஆண் பெண் வித்தியாசம் இன்றி பள்ளியிலேயே பழகி வந்தனர். கைகோத்து ஆடியும் பாடியும் வந்தனர். அவன் பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தான்; அவனது பாட்டி வீடு அவ்வூரில் இருந்தது. அவனும் அப்பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான். அவள் பக்கத்து வீட்டுப் பெண் நல்ல அழ குடையவள். அவளேயும் அவள் பெற்றேர் அப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். எல்லாப் பிள்ளைகளும் பழகி வருதல் போலவே, அவனும் அவளும் பழகி வந்தனர். ஆனல் ஏனையோரை விட அவர்களிடத்தில் நட்பு அ திகரித்து வந்தது. பள்ளிக்கூடம் விட்ட பிறகு தெருவில் விளை யாடும்போது ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/70&oldid=781735" இலிருந்து மீள்விக்கப்பட்டது