பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்வன் மகன் 53 ஒன்று சேர்வதில்லை. ஆண் பிள்ளைகள் விளையாட்டு வேறு பெண் பிள்ளைகள் விளையாட்டு வேறு. இருந் தாலும், அவன் சற்று விஷமி. வேண்டுமென்றே சில சமயம் பெண் பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருக்கும் போது அவர்கள் விளையாட்டைக் கலைத்து கலாட்டா' செய்வது வழக்கம். ஒருநாள் பெண்பிள்ளைகள் தெருவில் விளையா டிக் கொண்டிருந்தனர். பந்தை ஒருவர்மேல் ஒருவர் எறிந்து கொண்டு விளையாடினர்; ஒடிப் பிடித்துக் கொண்டு ஆடினர். கைகோத்துக்கொண்டும் பாட்டுப் பாடிக் கொண்டும் விளையாடினர். .ெ டு .ே ர ம் ஆடிப்பாடிக் களத்தபின்னர் ஒருத்தி விடுகட்டி விளையாடாலாம் வாருங்கள்” என்ருள். எல்லோரும் இத்ற்கு உடன்பட்டு ஆட்டத்தில் கலந்துகொண்டனர். பெண்பிள்ளைகள் விளையாட்டென்ருலே அது ஒரு அலாதி; கருவிலே திருவுடையவர்கள். இள மையில் பெண் பிள்ளைகள்தாம் ஆண் பிள்ளைகளைவிட அதிக அறிவுள்ளவர்களாக இருப்பார்கள். இளமை யிலேயே அவர்களுக்குப் பொறுப்புக்களே உணரும்சக்தி உண்டு. அவர்கள் விளையாட்டுக்களிலேயே பிற்கால வாழ்க்கையின் அம்சங்கள் பொலிவுறும், தங்கள் சிற்றறிவிற்கேற்ப அன்று மண்ணுல் ஒரு சிறு வீடு அமைத்தார்கள். தங்கள் உடல் உடை அழுக்காவது கண்டும் ஒருவரும் அதைப் பொருட்ட்டுத்தவில்லே. மண்ணைக் கொண்டுவந்து குவித்தாள் ஒருத்தி; அருகிலுள்ள குளத்தில் இறங்கி கொட்டாங்கச்சியால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/71&oldid=781737" இலிருந்து மீள்விக்கப்பட்டது