பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கவிஞன் உள்ளம் நீர் முகந்து கொண்டுவந்து கொட்டினுள் வேருெருத்தி, 'நீங்கள் கடைக்குப்போய் காய்கறி வாங்கிக் t கொண்டு வாருங்கள் ' என்று ஏவிள்ை மற்ருெருத்தி, அவள் மண்ணப் பிசைந்து வீடு, அமைத்தாள். வீட்டிற்குக் கூரைமட்டிலும் இல்லே. சமையல் அறை, சாப்பிடும் அறை, பட்டகசாலே, படுக்கை அறை - முதலிய எல்லா வசதிகளும் அமைந்திருந்தன அவள் அமைத்த வீட்டில். அவள் மிகச் சுறுசுறுப்புடன் காரியங்களைக் கவனித்து வந்தாள். அன்று அவனுக்கு அவன் பாட்டி அழகிய பட்டாடை உடுத்தி வெளியிலனுப்பினள். அவன் பார்ப்பதற்கு மாப்பிள்ளைபோலவே யிருந்தான். இவன் தெருவில் வரும்போதுதான் பெண் பிள்ளைகளின் வீடு கட்டி விளையாடும் விளையாட்டு மிகத்துரிதமாக நடை பெற்று வந்தது. அவன் துரத்தில் வரும்போதே அவள் அவனேப் பார்த்து விட்டாள் ; உடனே வேலையை நிறுத்திவிட்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள். இதற் குள் அவன் அவர்கள் விளையாடும் இடத்திற்கே வந்து விட்டான். " அன்று செய்ததுபோல் நான் கட்டின வீட்டை மிதித்தால் எனக்குக் கோபம் கோபமாய் வரும்; நான் மிகப்பொல்லாதவளாக இருப்பேன் ' என்ருள் அவள். இவர்கள் விளையாடிய விளையாட்டும், தான் உடுத்திக்கொண்ட பட்டாடையும் அவனே யோசிக்கச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/72&oldid=781739" இலிருந்து மீள்விக்கப்பட்டது