பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணிர்க்கடல் § i. களால் அவளே இன்புறுத்தி வந்தான். அவன் இப் போது பிரிந்து வெளிநாடு சென்றிருக்கின்ருன். கணவனது பிரிவுத் துன்பம் அவளே வருத்துகிறது. தாங்கீமுடியாத வேதனைக்குள்ளாகிக் காலங்கழித்து வருகிருள். அவள் தன் கலங்கருதிய பேர்வழி அல்லள். இவளது ஆற்ருமையில்ை இரங்கிள்ை அல்ல்ஸ். தன் உயிரை விடவும், தனது இன்பத்தை விடவும் தனது கணவனது கலத்தையே நாள்தோறும் கினேந்து வரும் உயர்ந்த கற்பியல் உடையவள் அவள். தனது கணவன் எங்குச் சென்ருரோ? சென்ற இடத்தின் தன்மை எப்படி யிருக்கிறதோ? அச்சங் தரும் பாலேவனத்தில் அலேந்து திரிகின்ருரோ? ... ... இப்படியெல்லாம் அவள் மனத்தில் பல்வேறு கினேவு கள் தோன்றுகின்றன; மறைகின்றன; மீண்டும் தோன்றுகின்றன. இத்தகைய நினைவுகளால் அவள் உணவு கொள்ள முடியவில்லை; சோறு என்ருல் கசப்பாக விருக்கின்றது. உணவில்லாததாலும் கவலையூரிலும் அவள் இளைத்துத் துரும்பு போல் ஆய்விட்டாள். வளையல்கள் கழன்று போகாதபடி, அவற்றின்முன் வழக்கமாய் இறுகச் செறிந்து வைத்திருக்கும் தொடி’ என்ற முன் வளையமும் அம்மெலிவினல் நெகிழ்ந்து விட்டது; அவ்வளவிற்கு அவளது உடல் இளேத்துப் போய்விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/79&oldid=781753" இலிருந்து மீள்விக்கப்பட்டது