பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்பு மொழி கடற் கரைக்குச் சென்று காற்று வாங்கும் வழக்கம் பண்டைக் காலத்திலும் இருந்திருக்கிறது. இன்று சென்னைக் கடற்கரையிலுள்ள செயற்கை வசதிகள் போல் அன்று இல்லாவிட்டாலும், இயற்கை எழில்கள் ஏராளமாக இருந்தன. அன்ருட வாழ்க்கை கடத்தும் பொருட்டு உழைத்துச் சலித்துள்ள மக்களும் உல்லாசமாகப் பொழுது போக்கும் ம க் க ளு ம் இன்றுபோல் அன்றும் கடற்கரையிலுள்ள மணல் வெளிகளில் உட்கார்ந்து காற்று வாங்குவார்கள். வேனிற்காலத்தில் காற்று வாங்க வருபவர்கள் மணலில் உட்கார்ந்து அதிக நேரம் உரையாடிக் கொண்டும், இயற்கை எழில்களை அனுபவித்துக் கொண்டும், விண்ணில் கானும் காட்சிகளில் ஈடுபட்டுக் கொண்டும் இருப்பார்கள். .ே கா ைட காலத்தில் சென்னைக் கடற் கரைக்குச் செல்பவர்கள் இதை அறியலாம். புது மணம் புரிந்துகொண்ட இளைஞர்கட்கு, இன்பந்தருவது கடற்கரை, புதிதாகப் பெற்ற வாழ்க் கைத்துணைவியுடன் நடந்துகொண்டே காற்று வாங்கு வதில் ஒரு தனி இன்பம் இருப்பதை அவர்கள் அறிவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/82&oldid=781761" இலிருந்து மீள்விக்கப்பட்டது