பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்பு மொழி §§ காலமுதல் மாலே வரையிலும் ஆலேகளிலும் அதுபோன்ற இடங்களிலும் உழைத்து அலுத்துப் போயிருக்கும் பாட்டாளி மக்கட்கும் சற்று கிம்மதியைக் கொடுக்கிறது கடற்கரை. வாழ்க்கைத்துணைவியுடன் ஒய்யார நடை கடந்து காற்று வாங்க வசதியில்லா விட்டாலும், ஒரு அணுவுக்குத் தேநீர்ப்பானம் பருகி, ஒரு அணுவுக்குக் காராமனிைக் கடலேயை வாங்கிக் கொரித்துக்கொண்டு மணலில் உட்கார்ந்துகொண்டிருக் தாலும், கடற்கரை தொழிலாளிக்கு இன்பத்தை, சற்று மன நிம்மதியை, அளிக்கத்தான் செய்கிறது. பல்கலைக் கழகங்களில் உயர்ந்த பல பட்டங் களைப் பெற்றிருந்தாலும், ஆழ்ந்த கல்வியறிவு கிறைந் திருந்தாலும், சந்தர்ப்ப பேதத்தால், கைதுக்கிவிட ஆள் இல்லாத காரணத்தால், அரசாங்க அலுவலகங் களிலும், ஆலேகளிலும், பெரிய வியாபார இடங்களி லும் அமர்ந்து உழைத்து அன்ருட எளிய வாழ்க் கைக்கே போதாத வருவாயையுடைய பேணு வீரர் களுக்கும் சற்று மனமகிழ்ச்சியை அளிக்கிறது கடற் கரை. அவர்களும் தம்போன்ற நண்பர்களுடன் உரை யாடிக்கொண்டு காற்று வாங்குகிருர்கள். வாழ்க் கைக்கே போதாத வருவாயையுடைய பள்ளி ஆசிரியர் களையும் இக்கூட்டத்துடன் சேர்த்துக்கொள்ளலாம். கடலலைகளைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்துகொண்டி ருக்கும்போது இளைஞர் உள்ளங்களில் புரட்சி அலைகள் எழும் முதிர்ந்த உள்ளங்களில், தத்துவ உணர்ச்சிகள் அரும்பி, அவை வேதாந்த அலேக ளாக வீசிக் கொண்டிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/83&oldid=781763" இலிருந்து மீள்விக்கப்பட்டது