பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கவிஞன் உள்ளம் கஷ்டங்கள் இன்னதென்பதைப் புத்தக மூலமாக அறிந்திருந்தாலும், அனுபவ்த்தில் எப்படியிருக்கும் என்பதை அறியாத கல்லூரி மாணவர்களும் கடற் கரைக்கு வந்து காற்று வாங்குவார்கள். சம்பாதிப்பதன் சிரமத்தை அறியாதவர்கள்; மாதாமாதம் தபால் எழுதும் சிரமத்தில்ை, பெற்ருேர்களிட்மிருந்து பணத் தைப்பெறும் கூட்டம். ஒரு மனிதனுடைய வாழ்க்கை யில் சிறந்த பகுதி கல்லூரி மாணவகை இருக்கும் பகுதியே என்பதை மாணவ கிலேயிலிருக்கும்போது யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அத்தகைய கள்ளங் கபடமற்ற, பளிங்கு போன்ற உள்ளத்தைக்கொண்ட மாணவர்களும் சிறு சிறு கூட்டமாகக் காற்று வாங்கு வதை சென்னைக் கடற்கரையில் இன்றுங் காணலாம். இத்தியாதி மக்கள் உலவி வருவது இன்றைய கடற்கரை. இன்றைய வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் போல் அன்றைய வாழ்க்கையில் சிக்கல்கள் இல்லை; பொருளாதாரத் தாக்குதல்கள் இல்லை. தவிரவும், ஒரு குறிப்பிட்ட நிலையிலுள்ளவர்கள், தம்முடைய வ்ருவாயை கினேத்துப் பார்க்காது, அதற்குமேலுள்ள நிலையிலுள்ளவர்களைப்போல் வாழவேண்டு மென்ற போதையால், தேவைகளைப் பெருக்கிக்கொண்டு, வரவுசெலவுக் கணக்கைச் சரியாகப் போடமுடியாது திண்டாடுவதைப்போல், அன்றையமக்கள் திண்டாடின தில்லை. உழைப்பிற்கேற்ற பலனும், தேவைக்கேற்ற வருவாயும், கிடைத்ததால், மக்கள் கிம்மதியாக வாழ்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/84&oldid=781764" இலிருந்து மீள்விக்கப்பட்டது