பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்பு மொழி 67 தார்கள். ஆகவே, அன்றைய மக்கள் மனேகிலே ஏறக் குறைய ஒரே மாதிரியாக இருந்தது எனலாம். இம்மாதிரியான மக்கள் அன்றைய கடற்கரை யில் உலவி வந்தனர். அவன் ஊர் கடற்கரையருகே இருந்ததல்ை, நாள்தோறும் மாலே நேரத்தில் காற்று வாங்கக் கடற் கரைக்குச் செல்வான்; அவனைப்போலவே, அவளும் அங்கு செல்வதுண்டு. இப்போதிருப்ப்துபோல் அவ்வளவு கூட்டம் இராது அன்றைய கடற்கரையில், ஏதாவது ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் எளிதில் அது எல்லோரிட மும் விரைவாகப் பரவிவிடும். எப்படியோ அவர்கள் ஒரு நாள் சந்திக்க நேர்ந்தது; சந்தித்துப் பேச வாய்ப்பும் கிட்டிற்று. இருவரும் ஒருவருக்கொருவர் ஏற்றவர்களே, ஒத்த பருவமும், ஒத்த குணமும், ஒத்த அறிவும், உடையவர் களாகத்தான் இருந்தனர். நாளடைவில் அவர்களது சந்திப்புக் காதலாக மலர்ந்தது. சில நாட்கள் களவு முறையிலும்.ஒழுகி வந்தார்கள். எப்படியோ இந்த இரகசியம் வெளிப்பட்டு விட்டது. கடற்கரைப் பேச்சு நாளடைவில் ஊர்ப் பேச்சாக மாறிவிட்டது; ஒரே அலர். ஊரெல்லாம் இவர்களது பேச்சாகத்தானிருந்தது. ஆகவே, அவன் கடற்கரைப் பக்கமாகச் செல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/85&oldid=781765" இலிருந்து மீள்விக்கப்பட்டது