பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கவிஞன் உள்ளம் சூரியன் மேற்கு மலையில் மறைந்தான் என்பதனல் அவளுக்கு இன்பம் கொடுத்துக் கொண்டிருந்த அவன் ஊரில் வந்து மறைந்து கொண்டான் என்ற கருத்து உறைந்து கிடக்கின்றது. முழு நிலா விளக்கமாய் எழுந்தது என்பதல்ை அவளது வீட்டில் காவல்கள் பலமாயிருக்கின்றன என்னும் கருத்து அடங்கி யிருக்கிறது. பறவை இனங்கள் ஆரவாரம் அடங்கி தத்தம் இருப்பிடங்களே அடைந்தன என்பதனுல் அக்கம் பக்கத்திலுள்ள பெண்களின் பழிச் சொற்கள் அடங்கி அவர்கள் வீட்டில் அமைந்து இருக்கின்றனர் என்பது பெறப்படுகிறது. லே மலர்களே நீலமணிகள் என்று மருள்கின்றனர் என்பதனுல், அவளே வீட்டிலுள்ளவர் கள் மருண்டு மருண்டு பார்க்கின்றனர் என்பதைக் குறிப்பாகப் புலப்படுத்துகிருள். கழி, உறக்கத்தில் இருக்கிறது என்பதால், ஊர் அமைதியாக இருக்கிறது என்பதைத் தெரிவிக்கிருள். குளிர்ந்த கடற்கரை தலை வனே என்பதல்ை, அவன் ஒன்றும் அறியாதவனைப் போல் இனிமையாக இருக்கிருன் என்பதை அவன் நினவுக்குக் கொண்டு வருகிருள். இவ்வளவு உட்கருத்துக்களைத் தெரிந்துகொள் ளும்படி கிலத்தின் இயற்கையைப் புனைந்துரைப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/88&oldid=781771" இலிருந்து மீள்விக்கப்பட்டது