பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iii தான் போதுமா? தேம்ஸ் நதியையும் சற் காவிரி சந்திக்க வேண்டியதுதான்! யாகா நீர்வீழ்ச்சியின் பேரிடிகளையும் கேட்கவேண்டியதுதான்! ஆஹவென்ஜெழுந்தது பார் யுகப் புரட்சி!' என்று பாாகியார் பாடியிருக்கிருாே, அந்த ரஷ்யப் புரட்சி இடிக்குரலில் பேசி. மின் - எழுத்துக்களில் எழுதிவரும் புத்தம் புதிய இலக்கியத்தையும் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனல் தமிழ் வளரும் புதிய புதிய துறைகளில் எல்லாம், தமிழின் உயிர்காடி பேசவேண்டும்; சங்க இலக்கியங்களில் கொலு விருக்கும் அரசிளங் குமரியின் அதிகார முத்திாை வேண்டும்; அதாவது, தமிழ் தமிழாக வளரவேண்டும். நம் இலக்கிய வளர்ச்சிநெறியைச் சிறிதும் தெரிந்து கொள்ளாமல் பிற இலக்கியங்களின் உதவியால் மட்டும் தமிழை வளர்த்துவிட இயலாது. புதிய புதிய கருத்துக்களை வெளியிட லாம்; வெளியிடத்தான் வேண்டும். புரட்சிகரமான கருத்துக் களையும் காசாரமாக வெளியிடலாம் பா ாதியார் வெளியிட வில்லையா? அவற்றை வெளியிடுவதற்குப் புதிய புதிய சொற்களே யும் சொற்ருெடர்களையும் கொண்டு வாலாம். வேறு மொழி களிலிருந்து கருத்துச் செல்வத்துடன், வேறு நாடுகளிலிருந்து கலைச் செல்வங்களுடன், விஞ்ஞானச் செல்வங்களுடன், இன்றிய மையாத சொற்செல்வத்தையும் கொண்டு சேர்த்து வீட்டு மொழி யின் பொக்கிஷத்தைப் பெருக்கிக் கொள்ளலாம். ஆனல் பாரதியாாைப்போல், பாரதிதாசனப்போல், கவிமணியைப் போல் தமிழின் பண்போடு கூடிய ஜீவசக்தியை உணர்ந்து எழுத வேண்டும்; பாடவேண்டும். அப்போதுதான் பழமைக்கும் பழமை யான தமிழ், புதுமைக்கும் புதுமையாக வளர்ந்தோங்க முடியும். தமிழ் ஒரு குழந்தைப் பாஷையன்று, சங்ககாலம் தொட்டு -ஏன், அதற்கும் முன்-ே எவ்வளவோ ாேலம் கண்டு, எத்தனையே நிகழ்ச்சிகள் கண்டு, கருத்து வேத்றுமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/9&oldid=781775" இலிருந்து மீள்விக்கப்பட்டது