பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவு வேட்கை கல்வி கரையில, கற்பவர் நாள் சில' என்று கல்வியின் அளவின்மையையும் கற்பவர்களின் குறுகிய வாழ்நாளேயும் குறிப்பிட்டிருக்கிருர்கள் தமிழ் நாட்டு மூதறிஞர்கள். கற்தக் கற்கக் குறையாத கல்வி யைப்பற்றியும் மனிதர்களுடைய குறைந்த வாழ்நாளைப் பற்றியும் இந்நாட்டு அறிஞர்களும் மேட்ைடு அறிஞர் களும் எவ்வளவோ கூறியிருக்கிருர்கள். ஆதியில் மனிதர்கள் விலங்குகள் போல் காட்டு மிராண்டிகளாகத் திரிந்து வந்தனர். உண்டு உயிர் வாழ்வதைத் தவிர அவர்கள் வேருென்றையும் அறி யார். அவர்களுக்கு அணிவதற்கு ஆடையில்லே, கருத் துக்களைத் தெரிவிப்பதற்கு மொழியில்லே. தழைகளே யும் தோல்களையும் அணிந்து வந்தார்கள். ஒலிக் குறிப் புக்களாலும் சைகைகளாலும் கருத்துக்களேத் தெரி வித்துக் கொண்டார்கள். எளடைவில் ஒலிக் குறிகள் வரிவடிவமாகிப் பிறகு மொழியாக வளர்ந்தன. முதலில் மொழி அன்ருட வாழ்க்கையில் பயன்படும் கருவியாக வே இருந்து வந்தது. வேலை செய்து பிழைக்கும் மக்கள் செலவு செய்த பணம் போக மீதியைச் சேமித்து வைப்பது போலவே, மொழிகளிலும் அன்ருட வாழ்க் கைக்குப் பயன்படாத ஒரு சேமிப்புத் தொகை திரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/90&oldid=781777" இலிருந்து மீள்விக்கப்பட்டது