இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
- தாழங் குடையல்லவோ !
- தள்ளாடும் நடையல்லவோ !
- மாலைப் பொழுதல்லவோ !
- வண்டாடும் செண்டல்லவோ!...”
இந்தத் தருணத்தில் திருமதி பி. சுசீலா பாட, நாம் கேட்கவேண்டும்.
சரி: பாட்டைப் படியுங்கள்: பாடாதீர்கள்!
பாடும்பொழுது குரலைக் கேட்கிறோம். யார் குரலை, தெரியுமா? பாடுபவரின் குரலை. ஆனால் படிக்கும்போது, பாப்புனைந்தவர் குரலை நம்மால் படிக்க முடிகிறது.
இந்தத் திரைப்பாடலில் கவிஞர் சாதித்தது என்ன?
சிறுமியை எதெதற்கோ உவமை காட்டிப் போற்றுகிறார்; புகழ்கிறார். குழந்தைத் தெய்வத்தின் சிறப்பியல்புகளைச் சுட்டிச் சுட்டிப் பேசுகிறார்.
ஒரு விஷயம்:
“கவிஞர் கண்ணதாசனை ரசிப்பதற்கு மனம் வேண்டும்; படிப்பும் பக்குவமும் வேண்டும்!” என்று நான் குறித்துக் காட்டியிருந்தேன்.
கவிஞருக்கும் எனக்கும் பழக்கமுள்ள திரையுலகப் பிரமுகர் ஒருவர் இவ்வரிகளைப் பாராட்டியிருக்கிறார்.
14