பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாமலை மாணவர் ஒருவருக்கு மட்டிலும் இக் கூற்றில் உடன் பாடு இல்லையாம்.

சரி.பாட்டுக்கு வாருங்கள்:

அந்தச் சின்னஞ்சிறு பெண்ணை முத்துக்கும் மலருக்கும் சிட்டுக்கும் ஒப்பிட்டு, செம்மாதுளைச் சிரிப்பென்றும், மாவடுக் கண்ணென்றும், மைனுவின் மொழியென்றும், பொன் உடலென்றும் அங்கம் பிரித்துப் பாடி, அது கழிந்ததும் “தாழங் குடையல்லவோ!...வண்டாடும் செண்டல்லவோ!..” என்றெல்லாம் வழக்கம் போல வினா விடுத்து முடித்துப் பெருமூச்சுவிட முயல்கிறார்.

இப்பொழுதுதான், என் பெருமூச்சு சூடுபிடிக்கத் தொடங்குகிறது.

கவிஞரின் மேற்சொன்ன உவமைகள் என் வரைக்கும் புதுமையானவையல்ல. அப்படியென்றால், நான் படித்துப் படித்து அனுபவித்த இடங்கள் யாவை? ஒன்று: ‘கடவுள் தந்த பொருளல்லவோ?’

உள்ளத்தை ஆலயமாக வைத்துப் பாடியிருக்கிறார் திருமூலர். உள்ளமெனும் அக்கோயிலில் உறையும் கண் கண்ட தெய்வமாக மனித மனம் ஒளிவிடுகிறது. இவ்வுண்மையே நியதியாகும் பொழுது, தன் போக்கிலேயே மனித மனம் குழந்தை வடிவு கொள்ளத் தலைப்படுகிறது

15