பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்லுகிறார்: “செப்படி வித்தை செய்த பிற்பாடும், கோடி சென்மம் எடுத்து முடித்த பிறகும்கூட, பூதலத்தில் எங்ஙனம் வாழ்வது என்கிற புதிரானது மனிதப் பிண்டங்களுக்கு இன்னமும் விளங்காத அதிசயப் பொருளாகவல்லவோ இருக்கிறது!”

மெய்தான்: இத்தகைய அதிசயப் பொருளான வாழ்க்கையைத் தூண்டிவிட்டு-துண்டித்துவிட்டு, ஒதுங்கி நின்று-ஒதுங்கி நின்று ‘அலகிலா விளையாட்டுச் சிரிப்பு’ச் சிரிக்கும் அந்தப் பரம்பொருளை ‘பொருளனைத்தும் தரும் பொருளை’ நாம் எப்படிக் கணிக்க முடியும்? தாயுமானவ சுவாமிகள் பாடு வதைப்போல, “இருவினையுங் கூட்டி உயிர்த்திரளை யாட்டும் விழுப்பொருள்” அல்லவா ‘அவன்’!...

உண்மையை உருப்படுத்தித் தரும் வல்லமை கவிஞருக்கு இருந்தாலும், இல்லாமற் போனாலும், அச்சக்தி கவிதைக்கு இருந்தாகவேண்டும். இல்லையேல், கவிதையோ, கவிதையை யாத்திட்டவனோ பிழைக்க முடியாது! “கவி புனையும் கவிஞன், தானே ஒரு கவிதையாக இருக்க வேண்டும்,” என்கிறார் ஆங்கிலப் பண்டிதர் ஜான்மில்ட்டன். இந்த ஒரு வரியில் உலகத்தத்துவமும், அதன் நிழல்படிந்து நிழலாடும் வாழ்வுத் தத்துவமும், அத்தத்துவத்தின் நியமக் கோட்பாடும் தெளிவாகின்றன.

எண்ணிப் பார்க்கிறேன்.

21