உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையைப் பார்ப்பது சுலபம்; ஆனால், படிப்பது முரடு.

ஆனால் வாழ்க்கையின் அமைப்பாளனைப் படிப்பது எளிது; பார்ப்பது கஷ்டம்.

இவ் வகையில் அமைகின்ற வாழ்க்கையையும், அவ்வாழ்க்கையை இயக்கவல்ல கடவுளையும் நான் எடைபோட்டுப் பார்க்க விழைகிறேன். ஆண்டவன், அவனுக்கே உரிமைகொண்ட உபாயப்படி உயர்ந்துவிடுகிறான்!

கவிஞர் திருலோக சீதாராமின் நல்லிணக்கத்தைப் பெற்ற என்னுடைய பாடல் வரிகள் இவை:

“இறையை உணர்ந்திட மறைகளுண்டு-அவ்
விறையை மறைகள் அறிவதில்லை!
மறையை உரைத்திடு மிறைவன்-றனை
மனிதர் அறிவ தெளிதல் லவே!”

‘சிவாஜி’ ஆசிரியருக்கு உவப்புத் தந்த வரிகள் இவை.பொருளுக்கும் பொருள் ஆனவனைப்பற்றிய இப்பாடலின் பொருள் எளிதாகவே புரிகிறதல்லவா?...

நீங்கள் இப்போது இன்னொரு தத்துவத்தைக் கேட்கவேண்டும்.

24