உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4. கடவுள் உயர்ந்தவனா?
கவிஞன் உயர்ந்தவனா?


ஆண்டவனிடம் கவிஞன் தோற்றுப்போய் விடுகிறானா?

ஆதங்கம் கண்கட்டிப் பொத்தி விளையாடும் வினா இது.

ஏறக்குறைய மானிட வாழ்வும் இதே கோலத்திற்குப் பணிவதுதான். இல்லையா?

எனவே, மானிட வாழ்வுக்குள் தலை வணங்கும் தன்மையைப் பழகிக் கொண்டுவிட்ட மானிடனின் முதற் குருவாக வழி மறித்து நிற்கிறான் இறைவன். இத்தகைய உயர் பக்குவம் வாய்க்கப் பெற்றவனிடமா, கேவலம், மனிதக் கவிஞன் தோற்றுப் போகிறான்? தன்னைப் படைத்த மூல சக்தியையா கவிஞன் தோற்கடிக்கத் துணிந்துவிட்டான்...?

ஆம்.

நான் சொல்லவில்லை.

அன்பர் ‘கலைவாணன்’ சொல்கிறார்.

26