பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைவாணன்’ என்றதும், உடனே நடிகர் கலைவாணரை நினைத்துக்கொண்டு, கடிதங்கள் எழுதியிருக்கிறர்கள் சிலர்.

நடிகன், கவிஞனாக இருக்க வாய்க்கும் பொழுது, பாவலனின் மனம் ‘கூத்து மனமாக’ மட்டும் இருக்காமல் இருக்குமா?

கவிஞன், கட்டாயம் நடிகனாக இருந்துதான் ஆவான். ஏனென்றால், கவிஞனுக்கு அவனியே ஓர் ஆடுகளம்தானே?

நான் குறித்துணர்த்தும் ‘கலைவாணன்’ உண்மைக் கவி. அதாவது, பிறப்புக்கவி. இயல்பின் அடிப்படையில் (Realistic Base) இயற்கைப் பான்மை வளரப் பெற்றுப் பக்குவப் பட்டவர் இவர். சொற்கள் ‘மாயம்’ புரியும்: ஆனால் அவை ‘மாயை’அன்று!

ஒரு பாடல் நினைவில் முட்டுகிறது. முட்டின்றிப் பேணாவிலிருந்து வழிகிறதா, பார்க்கலாம்!

“விதி என்ற வெம்புயல் விரிட்டு விசையில்
வினையிருள் அறிவொளி வீழ்ந்திடச் சூழயில்
கதியற்று வாழ்க்கையாங் கடலுக்கு மத்தியில்
கட்டுண்ட என்மனக் கப்பல் நிலேக்கவோ?”

மண் வாழ்வைப் பற்றிப் புரியும்படி சொல்ல அவருக்குக் கடலும் துனை புரிவது, விதியும் வினையும்கூட உதவி செய்து விட்டன.

27