பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காசினியைப் பார்த்துக் கேட்கும் கவிஞனின் வினாவுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

என் பதில் புதுமையாகவும் புத்தொளி தருவதாகவும் இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

கடவுள் யார்?
கவிஞன் யார்?
அசல் எது?
நகல் எது?
‘பற்றற்றான்’ அசல்.
பற்றுக்கொண்டான் நகல்.
கடவுள் அசல்.
கவிஞன் நகல்.
‘அலகிலா விளையாட்டுடையவன்’ ஐயன்.

அவனுடன் விளையாடும் தகுதி, அல்லது திறன் அல்லது தன்மை கவிஞனுக்கும் கிட்டவேண்டு மென்னும் ‘நல்லெண்ணம்’ காரணமாகவே கவிஞனையும் தனக்குச் சமானமாக வாழ, நிலவ, நிற்க அனுமதிக்கிறான் ‘அவன்’.

‘அவன்’ அன்றி ஓர் அணுவும் அசையாதல்லவா?

ஓர் அதிசயம்:

கடவுளே முதற் கவிஞன்!

32