பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாடும் திறத்தாலே பாட்டைப் பற்றியவன்: அதன் வினைபலனாக, பாட்டுடை மக்களைப் பற்றியவன்.

கடவுள் முதற் கவிஞன் என்றால், கவிஞன் இரண்டாம் கவிஞன் என்பது தன்னாலேயே தெளிவாகிவிடுகிறது.

இந்த ஒரு முடிவுகூட, சுடலையாடிக்குக் கிட்டுகின்ற வெற்றிதான்!

பரிசு பெற்ற அன்பருக்குக் கவிஞனே உயர்ந்தவன் ஆனான்.

“கடவுள் படைத்தவெலாம்
காலத்தால் மாறியது:
கவிஞன் படைப்புக்களோ
காலத்தை மீறியது!”

இந்நிலை, மேற்படி கவியை யாத்த கவிஞனின் செல்வாக்கால் ஏற்பட்டது. இது அந்தப் பாடலின் மதிப்பு.

வேடிக்கையான வாதம் இது.

கடவுளின் படைப்புக்கள் காலத்தால் மாறலாம்; மாறத்தான் வேண்டும். இந்தச் சக்திகூட, ‘எல்லாம் உணர்ந்தவன்’ விதியின் கருவியாக இயங்குகின்ற முடிவினால் விளையக்கூடிய ஓர் ஆரம்பமேதான்!

33