பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆரம்பத்தில் சுவையிருக்கலாம்.

ஆனல் முடிவில்தான் ‘உலகம் சுழல்கிறது.

இதுதான் வேதம்: ஆம், வேதம் முதல்வனே முதல்வன்!

அவனுக்கு வாய் த்திட்ட வழி ஒற்றி தான்

கவிஞன்.

கடவுள் இல்லையென்றல், கடவுள் எனும் சக்திப் பொதுநோக்கின் சத்தியநிலக்குட்பட்ட கவிஞன் இருந்திருக்க முடியாதல்லவா?

ஆகவே, கடவுளே உயர்ந்தவன் மறுக்கமுடியுமா உங்களால்?

மறுக்கமுடிகிறதா உங்களால்?

முழு முதற்கடவுளே ஒரு தத்துவம்’ என்ற முடிவுக்கு வந்தேன். எனவேதான், வாழ்க்கை ஒரு தத்துவப் பொருளாகிறது. அதன் முடிவின் ஆரம்ப மாக, மேற்படி வாழ்வியலின் ஒர் உறுப்பாகிவிட்ட கவிஞனும் ஒரு தத்துவம்' ஆகிறன். இந்தத் தத்துவத்தின் நியதிதரும் தார்மீக விழிப்பின் பயனுகவேதான், கவிஞ ன் உருமாறி-உருக் கொண்டு, ஆதியும் அந்தமும் இலானின் உறுப்பாக முடிகிறது. இப்படிப்பட்ட சலுகையில்தான், கவிஞர் கலவாணன் அவர்களின் கவிஞன் உங்களையும் என்னேயும் வம்புக்கு இழுத்து விட்டான். அல்லவா?

34