பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெண்: உம்மை நினைத்திருப்பேன்;
என்னை மறந்திருப்பேன்!

ஆண்: கண்ணில் கலந்திருப்பேன்;
நெஞ்சில் நிறைந்திருப்பேன்!

காதலர்தம் இனிக்கும் கனாக்களைக் காட்டிலும், இவர்களது மாற்றுரைப் பாடல்கள் இனிக்கின்றன!

காதல் திட்டமிட்டு உருவாக முடியாமல் போனாலும், இவர்களின் காதல் திட்டம் வல்லமை கொண்டதாகத்தான் தோன்றுகிறது.

ஏன், தெரியுமா? இந்தக் காதற்பா அப்படி!

ஆனால், பாடலைப் பற்றி அரிஸ்டாட்டில் விளக்கும் பொழுது, “சிறந்த முறையில் கூறப்பட்ட பொய்” என்கிறாரே!

அவர் இந்தக் காதற் பாட்டைக் கேட்டிருந்தால், தன் குறிப்பை மாற்றிக் கொண்டிருப்பார் என்று நீங்கள் சொன்னால், எனக்கு அட்டி ஏதும் கிடையாது.

எனக்கும் காதல் என்றால், நிரம்பப் பித்து; மயக்கம்!

ஆமாம்; மனிதமனம், வாழ்வு, தெய்வம் ஆகிய முக்கோணத்துக்குள் செக்குமாடாகச் சுற்றிச்

38