உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுழன்று வரும் இந்த மானுடப் பிறவிக்குக் கிடைத்திருக்கக் கூடிய குறுகிய காலப் பொழுது போக்கே இந்தக் காதல் வியவகாரம்தானே?

என்ன, அப்படிச் சிரிக்கிறீர்கள்?

ஓஹோ! அந்த இணையின் பாடல் உங்கள் செவிகளில் இன்னமும் இன்பத் தேனைப் பாய்ச்சுகிறதா?

எனக்குச் சற்று ஓய்வு வேண்டும்.

ஆகவே, நீங்கள் ரசிக்கப் போகிற அற்புதமான காதற்பாக்களுக்கு ஒத்திகை பார்த்துக் கொள்ளும் வகையில், ‘கவிஞரின்’ இப்பாடலே மீண்டும் ஒருமுறை பாடச் சொல்லிக் கேளுங்கள்.

தட்டமாட்டார்கள் அக்காதலர்கள்!....

உங்கள் காதல் மனங்களே த் தட்டாமல் இருக்கவும் மாட்டார்கள்!

அதோ, பாடத் தொடங்கிவிட்டார்கள்;

“பொன்னென்பேன்-சிறு
பூவென்பேன்-காணும்
கண்ணென்பேன்-வேறு
என்னென்பேன்?”

39