கொடுத்து விடும்போது, அவனுக்கு அவள் தான் காதல் தெய்வமாகத் திகழ்வாள்; வேண்டும். இது குறிஞ்சிக் கவியின் சிறப்புக்களில் ஒன்றகும்.
பொன்கைத் தோன்றும் காதலி, பூவாகவும் தோன்றுகிறாள். பூவையரைப் பூவுக்கு நிகராக ஏற்றிப் போற்றுகிறார் கவிஞர். கம்பர் பெருமானைப் போற்றுகிற கவிஞராயிற்றே!
“மையறு மலரின் நீங்கி
யான் செய்மா தவத்தின் வந்து
செய்யவள் இருந்தாள்!”
‘குற்றமற்ற தாமரைப் பூவிலிருந்து நீங்கி நான் செய்த அதிக தவத்தின் காரணமாக-திருமகளே-அதாவது சீதையே என்னிடம் வாழ்கிறாள்’என்று சீதையை இலக்குமியாக உவமிக்கிறார் கவிச் சக்கரவர்த்தி.
பொன்னே ஒரு தட்டிலும் பூவை ஒரு தட்டிலும் வைப்பதென்ற பண்டை வமிச வழித் தொடர்பின் ஆதாரத்துக்கும் இப்பாடல் உதாரண்ம் சொல்ல
பொன்னாகவும் பூவாகவும் விளங்கக் கூடிய ‘ஆசைப் பாவை’யைக் கண்ணாகவே மதிக்கிறான் அவன். கண்ணாக்கி உச்சத்தில் அமர்த்திய பின், அவளுக்கு வேறு மரியாதை எதற்கு? கண்ணும்
42