பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்ணும் கலந்த பின் வாய்ச் சொற்கள் பயனிழைக்கா தென்ற வள்ளுவத்தையும் மிஞ்சி விடுகிறார்கள், பாருங்கள்.

‘கடைக்கண்ணால் என்னைக்
கொல்வான் போல்நோக்கி
நகைக் கூட்டஞ் செய்தான்
அக்கள்வன் மகன்’

‘குறிஞ்சிக் கலி’ப்பா இது.

கண்ணின் சூட்சுமம் தெரிய வேண்டும்; புரிய வேண்டும்.

பெண் கெட்டிக்காரி, தமிழ்ச்சாதிப் பெண் இல்லையா?

‘... ....கண்கள்
நானென்றால்-பார்வை
நீயென்பேன்.....’

உடனே அவள் சூழலே அனுசரித்துப் பாடி விடுகிறான். கண்ணும் பார்வையும் விதியும் விதி செய்வோரும் போல நியதி மகத்துவம் பூண்டவை.இதைப் போலத்தானும் இக் காதலர்கள்!

“சிட்டு முகம் பார்த்துச் சிரித்திருப்பேன்” என்கிறான் அவன். ஷெல்லிக்குக் கிட்டிய வானம் பாடி போலத்தான் போலும்!

43