பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

" மாங்கொழுந்தில் முகம்பார்த்துக் கொள்ளு கின்ற
   வரிக்குயிலே! நீஉனது துனேவி யோடு,
தூங்குகின்றாய், இறகோடு இறகு சேர்த்து,

   சுவை இரவு வளர்க்கின்றேன்.நானும்,
(உன்னைத்

தாங்குகின்ற மரக்கொம்பு, உனக்கு ஊஞ்சல்;
     தழுவுகின்ற இளம்மனைவி எனக்கு ஒடம்!
தீங்கரும்பை நீதின்ன மாட்டாய், நீயோ

  தின்னுகின்ற மாங்கொழுந்தை
(நானும் தின்றேன்.”

காதல் அனுபவங்களுக்கு வாயில்லாச் சீவன்களும் உடந்தையாவது இயற்கை நெறி அல்லவா?

காதல் விளக்கங்கள் எவ்வாறு பலவகைப் பட்டனவோ, அதே பாங்கில் தான், காதலின் அனுபவங்களும் வகை வகையானவை!

இங்கே ஒரு பாடல்: தலைவியின் காதலைச் சித்திரிக்கிறது:

"......சோலையிலோர் நாள் எனையே
தொட்டிழுத்து முத்தமிட்டான்:
    துடுக்குத் தனத்தை என் சொல்வேன்?
    மாலைப்பொழுதில் இந்த மாயம் புரிந்த
    வாய்விட்டுச் சிரித்துப்பின் (செம்மல்
    போய் விட்டானேடி தோழி..."

45