பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏன் தெரியுமா? அவர்கள் இந்த முத்த நிகழ்ச்சிக்கு முன்னே முத்துப் போல மகிழ்வுள்ள சந்திப்புக்கள் பலவற்றை உண்டாக்கிக் கொண்டிருப்பவர்கள். திடுதிப்பென்று கண்டு, முத்தம் பெற்றால்தானே, அவளே திருட்டுத்தனத்துக்காகவும், அவனை உணர்ச்சி வெறிப்பட்டதற்காகவும் குற்றம் சாட்டி, ‘செக்ஷன்’ காட்டமுடியும்? “உள்ளத்தனையது. உயர்வு” என்ற தத்துவத்தை என்னைப்போல, பாவேந்தரின் காதலர்களும் உணர்ந்தவர்கள்தாம்! அட்டை இல்லை!

“பெண்மைதான் தெய்வீகமாங் காட்சியடா!”

ஆணித்தரமான அழகுணர்ச்சியில் உலகில் நியதியைச் செருகிப்பாட வல்லவர்பாரதி.

இப்படிப்பட்ட மனத் திண்மை கொண்டு ஒழுகிடும் காதல் தலைவி தன்னைத் தொட்டிழுத்து முத்தம் ஈந்தவனின் துடுக்குத்தன்த்தைத் குறிப்பிடு கையில், அவளுள் அவனைக் குறித்துச் சினம் பொங்கியதாக நாம் உணர வழியில்லை

தோழியிடம் இன்னும் ஏதோ சொல்லத் தலைப்படுகிறாள் தலைவி:

ஓடிவிழிக்கு மறைந்தான்-ஆயினும் என்றன்
உள்ளத்தில் வந்து நிறைந்தான்!
வேடிக்கை என்ன சொல்வேன்
மின்னல் போல் எதிர்நின்றான்;

48