வேண்டித் தழுவிச் சென்றேன்;
தாண்டி நடத்து விட்டான்!
- அகம் புகுந்தான் சேயோ-அவனை எட்டி
- அணைக்க வழிசொல்வாயோ!
சகம் பெறும் அவன் அன்று தந்த துடுக்கு
சக்கரவாகம் போல் வந்தான் : [முத்தம்
விழிக்கு, மறைந்தான் தலைவன்: என்றாலும் விழி வழி மனம் புகுந்தான். உள்ளங்கவர் கள்வன் அவன் என்பது. அவள் - கருத்து- அடியார்க்கு ஆண்டவன் உள்ளங்கவர் கள்வனாக இருக்குமாப் போல! மனிதமனத்தின் ‘பால் இயல்பு’ இவ்வாறு ‘கள’வில் தொடங்கி, களவில் தடுமாறுகிறது! உணர்ச்சி பூர்வமான மன உணர்வுகளை நெருடி மீட்டி விடுகின்ற. இம்மாதிரி ‘அகப்பாக்களை’ப் பாடியிருக்கின்ற நல்ல கவிஞர்களை நான் இப்பொழுது சந்திக்கப் போகிறேன்.
உலகினுக்குக் கண் ஆகிறாள் பெண் என்றால், அந்தப் பெண்ணுக்குக் கண் ஆகிறது நாணம். நாணம்தான் பெண்மைக்கு எழிற்கவசம்; அதுவே அவளுக்கு நிறைகாக்கும் காப்பாகவும் அமைகிறது. பெண் நாணவேண்டும். அதில்தான் காதலின் தற்காப்பு உணர்ச்சி குமிழ் பறிக்கிறது. நாணத்தில் நகை பிறக்கிறது. சிரிப்பையும் நாணத்தையும் எடைபோட்டு, பெண்ணை எடை போட்டுவிடக் கூடும்!
49