பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிங்கநடையெனச் சங்கத் தமிழ்மறம்
செஞ்சீரடி பரவப்
பொங்கும் இளமையோடு அங்கெழுந் தோனும்
புதுமையைக் கண்டு கொண்டான் காதல்
பதுமையைக் கண்டு கொண்டான்!

காதலிக்காகக் காத்திருந்த காதலனுக்குக் காதல் தேவதையின் பார்வை கிடைத்து விடுகிறது. அது அவனுக்கு ஒரு புதுமையாகவும் படுகிறது.

அப்புறம் ... ஆணின் எழில் நலம் கண்டு களிக்க நங்கை அமர்ந்து விடுகிறாள். கண்கள் கூடவும், நெஞ்சங்கள் கூடுகின்றன. நேயம் கலந்து, காலமெனும் மாயம் கடக்கின்றனர்!

நாணியும் கோணியும் ஆணெழில் காணவும்
நங்கையமர்ந்து விட்டாள்;
‘பேணி அழ கெல்லாம் காண் இவளே!’ எனப்
பெண்மை வியந்து விட்டான், காளே
அண்மையில் குந்தி விட்டான்!
ஆங்கொரு பாங்கு அவள் தேங்கிய
அக்கணம் ஓடியதே பார்வையும்
நீங்காது அப்பார்வையின் போங்திலே சென்றவன்
நெஞ்சமும் கூடியதே-கண்கள்
கொஞ்சவும் கூடியதே!

51