உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மணந்திடுமுன்பே இணைந்தவுள் ளங்களில்
மெளனமும் ஏன் எழுமோ?
பிணந்திடும் வேட்கை வனைந்த கனலெலாம்.
பெண்ணுல் வெளிவருமோ?-தாழ்ந்த
கண்ணுல் வெளிவருமோ?
குடமும் மறந்தனர்; இடமும் மறந்தனர்:
கோலம் மறந்தனரே!
நெடுமரப் பந்தரில் வடிவழ கோடுஅவர்
நேயம் கலந்தனரே! கால
மாயம் கடந்தனரே!...

கவிஞர் தமிழழகன் படைத்த இக்காதலர்களின் விந்தைக் காதல் நடவடிக்கைகள் உங்களுடைய சித்தங்கள மகிழ்விக்கின்றனவல்லவா?

அடுத்த பாட்டு:

அவன் அழகேசன். அவனுக்கு நாட்டியக்காரி ஒருத்தி கிடைக்கிறாள். அவனுக்காகத் தவம் இயற்றிய ‘ஒரே மனக்காதலி’ அவள். அவள் ஆட, அவன் அவள் வசம் ஆடுகிறன்.

ஒருகாலில் தவம் செய்யுதே!-தாமரை
ஓயாமல் உனை நோக்குதே!-

கவிஞர் கோவி.மணிசேகரனின் காதற்பா

தொடரும்:

52