பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

‘...தொற்றிடப் பிறந்த கிளி;
துய்த்திடப் பிறந்த சுகம்;
சொல்லிடப் பிறந்த கதையே!-இவள்
சுற்றிடப் பிறந்த கொடி;
தொட்டிடப் பிறந்த சிலே;
கற்றிடப் பிறந்த கலையே’...

ஆடலரசி மாதவிக்கு வாய்த்திட்ட கலையே வினையின் விதியாகவும், விதியின் விளைவாகவும் மருவி, மறுகி நின்ற கதையைப்போல, இந்தத் தேன்மொழியாளும், ‘சாதி ரோஜா’வின் நாயகனை அழகேசனுக்கு விதியானாள்; வினையானாள்; பிறகு அவனுக்கு அவள் வாழ்க்கை நெறியாகிறாள்.

இவ்வளவு பண்புகெழுமிய தேன்மொழி ஆடத் தொடங்கினாள் என்றால், அழகேசனும் அவள் வசம் ஆடத் தலைப்படுவதில் விந்தை என்ன இருக்கிறது? இல்லை, வேடிக்கை என்ன இருக்க முடியும்?

அழகேசன்-தேன்மொழியின் காதல் மயக்கம் அப்படி!

அவனுடைய மனக்காதலியே அவனுக்கு மலர்க் காதலியாகவும் உருக் கொள்கிறாள். ஆடுகிறாள்; பாடுகிறாள். தன்னைத் தாமரையாக்கு கிறாள்; தாமரையே தானாகிறாருள். ஒற்றைக்காலில் நின்று நித்திய தவம் இயற்றும் தாமரையின் தனிமைப் பண்பில்தான் அவளுடைய தனித்த மனம் பேசுகிறது; இருமனம் கொண்ட வகுப்பி

54