பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கருங்காலில் விரைவு பாய்ச்சி ஓடும் முகிலொடு விளையாடும் கன்னி நிலாவாக ஆகிறாள் தேன்மொழி. தமிழ்மொழி தெய்வத்தன்மை கொண்டதல்லவா? இங்கு கவிஞர் கோவி, மணிசேகரன் 'குருவான தமிழ்' என்று ஏற்றம் காட்டி, தேன்மொழியின் குணச்சித்திரத்திற்கு ஓர் உருவம் தந்துவிடுகிறர்.

ஓவியக் கற்பனைக்கும் காவியக் கற்பனைக்கும் கிட்டாத-அதாவது, ஒருநாளும் கிட்டாத அத்துணை எழில் நலம் பெற்றவள் அந்த எழிலார் ஏந்திழை யாள். அவள் இளமைக் கனவுகளின் கிட்டங்கி’!

நளனின் தமயந்தியை நீங்கள் அறிந்திருக்க வேண்டுமே!

அழகு சுமந்து இளைத்த
ஆகத்தாள், வண்டு
பழகும் கருங்கூந்தல்
பாவை-மழகளிற்று
வீமன் குலத்துக் கோர்
மெய்தீபம், அன்னவளே
காமன் திருவுக் கோர்
காப்பு.

இந்தத் தமயந்தியின் எழிலுக்குக் குறைந்தவ எல்லள் தேன்மொழி என்று கூறத் தோன்று கின்றதன்றே?.

விரகதாபம்தானே காதலுணர்வுக்கு வாய்த்திட்ட சீர்போல? இல்லையா?

56