பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அழகான ஒயிலோடு விளையாடுகிற ஓர் அழகியைப் பற்றிப் பாட, கவிஞன் தவிப்புக்கொள்வது சகஜமே தான்!

“வெறும் கருத்துமட்டும் கவிதை ஆகிவிடாது; வெறும் அழகு மட்டும் கவிதை ஆகிவிடாது. சொல்லப் போனுல், உண்மையைப் புகட்ட முயல் வதைவிட, அழகினைச் செய்வதே கவிதையின் முக்கிய நோக்கமாக அமைதல் இன்றியமையாத தாகும்,” என்று சுப. நாராயணன் வரன்முறை வகுத்துள்ள தன்மைக்குக் கவர்ச்சி வடிவமாக அமைந்திருக்கிறது மேற்கண்ட பாடல்!

அழகின் பதவுரையைப் பற்றிப் பகுத்துப் பார்க்கும் நிலையிலே, அழகுக்கு வாய்த்திட்ட கருத்தாக விளங்குகிற ரதிதேவியைப்பற்றி நமக்கு நினேவு கிளர்ந்தெழுவதில் வியப்பில்லைதானே?

“மான்மறி ஏனமும் தீக்குரல் யாளியும்
மாமத யானைகள் மந்தைகளும்,
மீன் இறை கொக்குடன் சக்கரவாகமும்
மாமரக் கோகுல மாயங்களும்
வான்தரு பூக்களும் வல்லியின் வாசமும்
மெல்லிய தென்றலின் மேகங்களும்
தேனடை சூழ்ந்திடும் ஈக்களின் சீரொடு
மன்றலேச் சேர்ந்திடும் கும்பல்களும்,
முன்புறம் இந்திரன் ஊக்கிடும் அப்சரஸ்
ஊர்வசி, மேனகை கூத்திடையில்
சொன்னயம் சிந்திட்ட மத்தளம் கொட்டிடும்
நந்தியின் கைத்திற விந்தைகளும்.

61